சிறுவணிக கூட்டுப்பொறுப்புக்குழுக் கடன்
| 1 | கடன் வகை | சிறுவணிக கூட்டுப்பொறுப்புக்குழுக் கடன் |
| 2 | கடன் வழங்கும் காரியங்கள் | சிறு வியாபாரம், பூ வியாபாரம், காய்கறி வியாபாரம், பழ வியாபாரம், கட்பீஸ் வியாபாரம், பிளாஸ்டிக் வியாபாரம், பெட்டிக்கடை வியாபாரம் மற்றும் இது போன்ற சிறு வியாபாரத்திற்கு |
| 3 | வயது வரம்பு | 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். |
| 4 | கடன் பெறத் தகுதியுடையவர்கள் | A.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களுக்கு B.வங்கியின் கிளை ஏரியாவில் தினசரி வியாபாரம் செய்யும் 4 முதல் 10 சிறுவணிகர்களை உள்ளடக்கிய குழுவிற்கு அல்லது குழுவில் உள்ள தனி நபருக்கு C.உறுப்பினரர்கள் வேறு எந்த நிதி நிறுவனத்திலும் கடன் பெற்று தவணை தவறியவர்களாக இருக்கக் கூடாது. |
| 5 | அனுமதிக்கும் கடனின் அளவு | நபர் ஒருவருக்கு சிறுவணிகக் கடனாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை (கூட்டுப்பொறுப்புக்குழுக் கடன் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.5,00,000/-வரை ) |
| 6 | கடன் பட்டுவாடா செய்யும் முறை | ஒரே தவணை வங்கி சேமிப்பு கணக்கு மூலம் |
| 7 | வட்டி விகிதம் | வட்டி விகித அட்டவணையில் உள்ளபடி |
| 8 | தவணைக் காலம் நிர்ணயம் | 350 நாட்கள் / 50 வாரம் |
| 9 | தவணைத் தொகை செலுத்தும் முறை | அசல் மற்றும் தினசரி நிலுவை அடிப்படையில் வட்டி கணக்கிட்டு செலுத்த வேண்டும். |
| 10 | அபராத வட்டி | 3 சதவீதம் |
| 11 | கடனுக்கு ஈடு/ஆதாரம் | உறுதி மொழிக் கடிதம் |
| 12 | வழங்க வேண்டிய ஆவணங்கள் | A.உறுப்பினர்கள் கூட்டாக வழங்கும் கடன் உறுதி ஆவணம். B.குழுத் தீர்மானம் . C.மனுதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் . D.புகைப்படத்துடன் கூடிய அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று நகல் ( KYC நடைமுறையின்படி). E.CIBIL அறிக்கை. F.வங்கி கோரும் இதர ஆவணங்கள். |
| 13 | பொது | மேற்படி நடைமுறைகளை மாற்ற, புதிய நடைமுறைகளை ஏற்படுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு. |
